அரசியல் செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகை

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'பாராலிம்பிக்' உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3.98 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் - 2020 போட்டிகளில், உயரம் தாண்டுதல் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, 2 கோடி ரூபாய்க்கான காசோலையை
 விளையாட்டு வீரர்களுக்கு  முதல்வர் ஊக்கத்தொகை

சென்னை:'பாராலிம்பிக்' உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3.98 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் - 2020 போட்டிகளில், உயரம் தாண்டுதல் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் சார்பில் 2020ல் நடந்த, 'பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு' போட்டியில், இந்திய அணி சார்பில் தங்கப்பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், அரவிந்த் சிதம்பரம், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு, தலா 20 லட்சம் ரூபாய்; அணி பயிற்சியாளர் நாராயணனுக்கு 12 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நடந்த, உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்று, வெண்கலப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், அதிபன், பிரக்ஞானந்தா, வைஷாலி, சவிதாஸ்ரீ ஆகியோருக்கு, தலா 10 லட்சம் ரூபாய். ஆண்கள் அணி பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 4.50 லட்சம் ரூபாய்; பெண்கள் அணி பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தருக்கு 3லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

கடந்த, 2019ல் கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடந்த, பிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில், தங்கம் வென்ற அதிபனுக்கு 20 லட்சம் ரூபாய்; 2019ம் ஆண்டு, சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இனியன்.மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி; 2020ல் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வர்ஷினி, நந்திதா ஆகியோருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு சதுரங்க விளையாட்டில், சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற ரத்தன்வேல், பிரனேஷ், இந்த ஆண்டு மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சவிதாஸ்ரீ ஆகியோருக்கு, தலா ௩ லட்சம் ரூபாய்க்கான காசோலை என மொத்தம் 15 பேருக்கு, 3.98 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
08-அக்-202114:05:52 IST Report Abuse
raja மாரியப்பனை தவிர வேற யாரும் தமிழன் இல்லைன்னு நம்ப தெலுங்கு மலையாளம் பேசும் தமிழனுவோ கொதிச்சு பொய் வருவாங்க பாருங்களேன்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X