அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் போட்டியில் 75 பேர் பங்கேற்க ஏற்பாடு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 75 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்கநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அடுத்த ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 75 விளையாட்டு வீரர்கள் மற்றும்

சென்னை:''தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 75 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்கநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:அடுத்த ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 75 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பப் போட்டி, இந்தியா முழுதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.அதை உலக அளவில் எடுத்து செல்ல முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், வெளிநாட்டில் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவியை பயிற்சி பெற, முதல்வர் அனுப்பி வைத்துள்ளார். அதேபோல மற்ற வீரர்கள் விரும்பினால் உதவி செய்யவும், வெளிநாட்டு பயிற்சியாளர்களை வரவழைத்து இங்கு பயிற்சி வழங் கவும், தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X