பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு திட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில்இருந்து வெளியூர் செல்வோருக்காக, 3,500 பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 14ம் தேதியும், விஜய தசமி 15ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. அதனால், 14ம் தேதி வியாழக்கிழமையும், 15ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை.இதையடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாக இருப்பதால் வெளியூர் செல்வோர் அதிகம்
 ஆயுத பூஜைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு திட்டம்

சென்னை:ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில்இருந்து வெளியூர் செல்வோருக்காக, 3,500 பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 14ம் தேதியும், விஜய தசமி 15ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. அதனால், 14ம் தேதி வியாழக்கிழமையும், 15ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை.இதையடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாக இருப்பதால் வெளியூர் செல்வோர் அதிகம் இருப்பர்.

மேலும், துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா 15ம் தேதி நடக்க உள்ளதால், தென் மாவட்ட பக்தர்களும் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,050 பஸ்களுடன், 12, 13ம் தேதிகளில் இருந்து கூடுதலாக 1,450 பஸ்கள் என 3,500 பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

வெளியூர் செல்லும் பயணியரின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னையில் மூன்று இடங்களில் இருந்து பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி, தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து, திண்டிவனம் வழியாக, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள்; போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும். அதேபோல, திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து, வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

அடுத்ததாக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். பயணியர் வசதிக்காக, பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு சிறப்பு பஸ் நிலையங்களுக்கு செல்லும் வகையில், மாநகர போக்குவரத்து கழகத்தின்சார்பில், இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பஸ் பயணத்தில், அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X