சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலப்பு திருமண தம்பதி தீக்குளிக்க முயற்சி

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'கலப்பு திருமணம் செய்ததால், கொலை மிரட்டல் விடுக்கும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என டி.ஜி.பி., அலுவலகம் முன், குழந்தையுடன் கணவன் - மனைவி தீக்குளிக்க முயன்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்வள்ளியூரைச் சேர்ந்தவர் பிரபாகரன்; இவரது மனைவி சசிகலா. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்தனர்; இரண்டு

சென்னை:'கலப்பு திருமணம் செய்ததால், கொலை மிரட்டல் விடுக்கும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என டி.ஜி.பி., அலுவலகம் முன், குழந்தையுடன் கணவன் - மனைவி தீக்குளிக்க முயன்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்வள்ளியூரைச் சேர்ந்தவர் பிரபாகரன்; இவரது மனைவி சசிகலா. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்தனர்; இரண்டு குழந்தைகள் உள்ளன.குடும்பத்துடன், சென்னையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு, மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரிடம் சசிகலா கூறியதாவது:கலப்பு திருமணம் செய்ததால், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பூபதி, வாசு, விஜய காண்டீபன், சங்கர்மற்றும் படப்பை குணா உள்ளிட்ட ரவுடிகள்,எங்களை ஊருக்குள் நுழைய விடாமல் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்; அடித்து துன்புறுத்துகின்றனர்.

என் தந்தை அண்ணாதுரையை குடிபோதைக்கு அடிமையாக்கி வருகின்றனர். கடன் கொடுத்தது போல போலி ஆவணங்கள் தயாரித்து, பாகப் பிரிவினையால் என் தந்தைக்குசேர வேண்டிய சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.கொலை மிரட்டல், சொத்து அபகரிப்பு முயற்சியில் ஈடுபடும் ரவுடிகள் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
08-அக்-202114:13:13 IST Report Abuse
raja உறவுகளே ரவுடிகளாய் சித்தரிக்க படுகிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X