பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆணைய கூட்டம் தமிழக பிரதிநிதிகள் அதிர்ச்சி

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று, காவிரி ஆணைய கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், தமிழக பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி.,காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முறைப்படி நீரை திறக்காமல்,

சென்னை:கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று, காவிரி ஆணைய கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், தமிழக பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி.,காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முறைப்படி நீரை திறக்காமல், கர்நாடகா இழுத்தடித்து வருகிறது.

செப்., மாதம் நடந்த ஆணைய கூட்டத்தில் முறையிடப்பட்டது. உடன், தமிழகத்திற்கு 34 டி.எம்.சி., நிலுவை நீரை திறக்க, ஆணைய தலைவர் ஹல்தர் உத்தரவிட்டார். ஆணையத்தின் 15வது கூட்டம், நேற்று நடப்பதாக இருந்தது. கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என கர்நாடகா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகா மதிக்காதது குறித்து முறையீடு செய்யவும், கண்டனத்தை பதிவு செய்து விட்டு வெளியேறவும், தமிழக பிரதிநிதிகள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், நேற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கவில்லை; 11ம் தேதி நடக்க இருப்பதாக தகவல் மட்டும் கிடைத்தது. அந்த தேதியும் உறுதி செய்யப்படாததால், தமிழக பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X