அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:ஒன்பது மாவட்டங்களில் நாளை இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அப்பகுதிகளில் நேற்று பிரசாரம் நிறைவு பெற்றது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 78 மாவட்ட கவுன்சிலர்,755 ஒன்றிய கவுன்சிலர், 1,577 ஊராட்சி தலைவர், 12 ஆயிரத்து 252 ஊராட்சி வார்டு உறுப்பினர்

சென்னை:ஒன்பது மாவட்டங்களில் நாளை இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அப்பகுதிகளில் நேற்று பிரசாரம் நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 78 மாவட்ட கவுன்சிலர்,755 ஒன்றிய கவுன்சிலர், 1,577 ஊராட்சி தலைவர், 12 ஆயிரத்து 252 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 60 மாவட்ட கவுன்சிலர், 621 ஒன்றிய கவுன்சிலர், 1,202 ஊராட்சி தலைவர், 7,453 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.இதுமட்டுமின்றி, 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 13 மாவட்ட கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர், 86 ஊராட்சி தலைவர், 279 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5:௦௦ மணியுடன் முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X