பெங்களூருவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
பெங்களூரு :பெங்களூருவில் ஐந்து மாடி கட்டடம் இடிந்தது. குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.பெங்களூரு கஸ்துாரி நகர் இரண்டாவது கிராசில், வி.ஜே., இன்பினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. ஐந்து மாடி கட்டடமான இதில் சில குடும்பத்தினர் வசித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன் கட்டடத்தின் அடித்தளம் சேதம் அடைந்த
பெங்களூருவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

பெங்களூரு :பெங்களூருவில் ஐந்து மாடி கட்டடம் இடிந்தது. குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பெங்களூரு கஸ்துாரி நகர் இரண்டாவது கிராசில், வி.ஜே., இன்பினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. ஐந்து மாடி கட்டடமான இதில் சில குடும்பத்தினர் வசித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன் கட்டடத்தின் அடித்தளம் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து பி.பி.எம்.பி., அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் குடியிருந்தவர்கள் வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.


latest tamil newsஇந்நிலையில், இன்று (அக்.07)கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்புவாசிகள் வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கஸ்துாரி நகர் போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரில் தொடர்ந்து கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்து வருவது, அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
10-அக்-202118:28:07 IST Report Abuse
Nesan நம்ம ஊரில் கொள்ளையோ, கொள்ளை அடுக்கு மாடிவீடு கட்டுவதில். மிகவும் தரம் அற்ற பொருள்கள், மனிதாபம் அற்ற மனிதர்களால் கட்டப்படும் வீடுகள் நீண்ட காலம் நிலைக்காது. மக்கள் உயிரில் விளையாடும் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும். அரசே அடுக்கு மாடிவீடு கட்டுவதில் தவறு செய்து வருகிறது. நம்ம ஊரில் தரமற்ற அடுக்கு மாடிவீட்டில் குடி போவது மிகவும் ஆபத்தான விஷயம்.
Rate this:
Cancel
V.THIYAGARAJAN - Bangalore,இந்தியா
09-அக்-202105:47:56 IST Report Abuse
V.THIYAGARAJAN ஐயா நான் பெங்களூர் வாசி. சில வருடங்களாக மார்வாடி மக்களின் கொட்டம் அதிகமாக இருக்கிறது- குறிப்பாக அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதில். என் குடியிருப்பு அருகே ஒரு மார்வாடி, மொத்தமாகவே சட்ட மீறல் கட்டிடம் கட்டி, பணமும் பார்த்து விட்டான். அவன் கட்டிடம் கட்டும் போதே விதி மீறல்களை கண்டு, அவனை எச்சரித்தேன். பணத் திமிரால், அவன் கண்டு கொள்ளவில்லை. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அவன் அப்பீல் செய்தும்,வழக்கு எனக்கு சாதகமாக வந்தது. உயர்நீதி மன்றம், பெங்களூர் கார்ப்போரேஷனை அந்த கட்டிடத்தை இடிக்கச் சொல்லி,3 வருடமாகிறது. இன்னும் இடித்த பாடில்லை. பணம் விளையாடி வருகிறது. நாசமாய் போக.
Rate this:
வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
10-அக்-202112:12:26 IST Report Abuse
வல்லவரையன்அய்யா.... “காசு, பணம், டப்பு... மணி, மணி....?”...
Rate this:
Cancel
Er K.R.Sashi kanth - JP ngr phase6, BLR,இந்தியா
09-அக்-202102:40:43 IST Report Abuse
Er K.R.Sashi kanth Even 5 floor bldgs collapsing means Quality of construction, foundation on weak soil ,lack of lime stabilization,bad quality construction materials improper ratios of cement/ lime with sand,chips and metal etc,non supervision by civil engineer,and non adoption of strict technical parameters are the major reasons for collapsing before attaining it's minimum of 75 yrs life
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X