பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.5,000

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:'விபத்தில் சிக்கியோரை மீட்டு, மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் உதவுவோருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்தாண்டு நாடு முழுதும் நடந்த 3.66 லட்சம் சாலை விபத்துகளில், 1.32 லட்சம் பேர் இறந்து உள்ளனர். இவர்களில் பலர், 'கோல்டன் ஹவர்' எனப்படும், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்காததால் இறந்து உள்ளனர். இந்நிலையில்,

சென்னை:'விபத்தில் சிக்கியோரை மீட்டு, மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் உதவுவோருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்தாண்டு நாடு முழுதும் நடந்த 3.66 லட்சம் சாலை விபத்துகளில், 1.32 லட்சம் பேர் இறந்து உள்ளனர். இவர்களில் பலர், 'கோல்டன் ஹவர்' எனப்படும், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்காததால் இறந்து உள்ளனர்.

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்துஅமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சாலை விபத்துகளில் சிக்கி இருப்போரை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்ப்போருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருதும் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 சிறந்த காப்பாளர்களுக்கு, மத்திய அரசின் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இத்திட்டம் வரும் 15ம் தேதியில் இருந்து, 2026 மார்ச் வரை அமலில் இருக்கும்.இதே வகையில் புதுச்சேரி அரசு, 2019 - 2020ம் ஆண்டு பட்ஜெட்டில், 'சாலை விபத்தில் சிக்கியோரை காப்பாற்றி, உடனடியாக மருத்துவ வசதி கிடைக்க உதவுவோருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என அறிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X