பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் பணி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:'குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடந்து வருகிறது. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன்,

சென்னை:'குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடந்து வருகிறது. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன், தொலைபேசியில் கொள்முதல் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

குறுவை பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அக்., 1 முதல் நேற்று முன்தினம் வரை, 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், கொள்முதல் பணிகள் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இப்பணிகளை மேற்பார்வையிட, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை, முதல்வர் அனுப்பி வைத்து உள்ளார்.மேலும், குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்கும்படி, துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X