பொது செய்தி

இந்தியா

இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு : கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் அதிகரிப்பு

Updated : அக் 09, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி :இந்தியாவின் செல்வந்தர்கள் குறித்த 'போர்ப்ஸ் 2021' பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டிலிருந்தே முதலிடத்தில் முகேஷ் அம்பானி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.போர்ப்ஸ் இந்தியா மொத்தம் 100 பேர் கொண்ட செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்:* இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட, 50
இந்திய செல்வந்தர்கள், சொத்து மதிப்பு , 50 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி :இந்தியாவின் செல்வந்தர்கள் குறித்த 'போர்ப்ஸ் 2021' பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டிலிருந்தே முதலிடத்தில் முகேஷ் அம்பானி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் இந்தியா மொத்தம் 100 பேர் கொண்ட செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:

* இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட, 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான இரண்டாவது ஆண்டிலும், இவர்களது வருவாய் அதிகரித்து உள்ளது

* பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்காரர்களில் 80 சதவீத பேர்களின் வருவாய், கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 61 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்வை கண்டுள்ளது

* முதலிடத்தை பிடித்துள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.95 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இவரது சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைவிட 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து உள்ளது

* இரண்டாவது இடத்தை பிடித்துள்ள அதானியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைவிட 200 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
அதானியின் சொத்து மதிப்பு 5.61 லட்சம் கோடி ரூபாய். கடந்த ஆண்டில் மட்டும் 3.71 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து உள்ளது

* ஷிவ் நாடார் 2.33 லட்சம் கோடி ரூபாய் உடன் மூன்றாவது இடத்திலும், ராதாகிஷன் தமானி 2.21 லட்சம் கோடி ரூபாயுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்

* இந்த பட்டியலில் ஆறு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 'ஜிண்டால்' குழுமத்தைச் சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் 7வது இடத்தை பிடித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
08-அக்-202121:30:45 IST Report Abuse
மனிதன் பத்தாது, இன்னும் அதிகமாக்கணும்.. விவசாய மசோதாவை செயல்படுத்தி, ஏர் இந்தியா, ரெயில்வே எல்லாத்தயும் தாரைவார்த்து இன்னும் இன்னும் பெரிய பணக்காரர்களா ஆக்கணும்..,அப்புறம் அவங்க குடுக்குற நிதிய??? வச்சு தேர்தலை சந்திக்கணும்...நமக்கு நாடா முக்கியம்? மக்கள் ஏதாவது கேட்டா 'பாரத் மாதாகி ஜெ, பாகிஸ்தான் ஒழிக, புல்வாமா தாக்குதல், ராணுவ வீரர்களின் வீரம்,புதிய இந்தியா இப்படி ஏதாவது சொல்லி திசை திருப்பி ஏமாத்திரலாம்...ப்ப்ப்பா
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-அக்-202117:01:23 IST Report Abuse
Mani . V எனக்கும் பலப், பல லட்சம் கோடியை கடனாக கொடுத்து பின்னர் தள்ளுபடி செய்தால் ஆசியாவில் அல்ல உலக அளவில் பெரிய பணக்காரன் ஆகி விடுவேன்.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
08-அக்-202112:52:20 IST Report Abuse
Yezdi K Damo எல்லா புகழும் மோடி பகவானுக்கே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X