அரசியல் செய்தி

தமிழ்நாடு

உரம் தட்டுப்பாட்டை நீக்க பழனிசாமி வலியுறுத்தல்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:'விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், வேளாண் இடுபொருட்கள் முதல், உரங்கள் வரை, உழவுப் பணிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காமல், தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. முக்கியமாக விவசாயிகளுக்கு
உரம் தட்டுப்பாடு, பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை:'விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், வேளாண் இடுபொருட்கள் முதல், உரங்கள் வரை, உழவுப் பணிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காமல், தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. முக்கியமாக விவசாயிகளுக்கு தேவைப்படும் உரம் கிடைப்பதில்லை என்ற செய்திகள் வந்துள்ளன.

மாநிலம் முழுதும் 60 சதவீதம் விவசாயிகள் பயிர் செய்து விட்டு உரங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.அ.தி.மு.க., அரசு, வேளாண் பருவத்தின் போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் விதை நெல், உரங்கள் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும்.

தி.மு.க., அரசோ, உரங்களை இருப்பு வைத்ததாகவோ, மாவட்டங்களுக்கு வழங்கியதாகவோ, அதற்கான முயற்சி களில் இறங்கியதாகவோ தெரியவில்லை. எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X