வார்டுகளில் 84 சதவீதம் பேருக்கு தடுப்பூசிதெற்கு மண்டலத்தில் பணிகள் படுமந்தம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வார்டுகளில் 84 சதவீதம் பேருக்கு தடுப்பூசிதெற்கு மண்டலத்தில் பணிகள் படுமந்தம்

Added : அக் 07, 2021
Share
பெங்களூரு:பெங்களூரில் கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வார்டு வாரியாக தடுப்பூசி முகாம்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் நகரின் வார்டுகளில், 84 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி சில நாட்களாக வார்டு மற்றும் பிளாக் வாரியாக ஆய்வு நடத்துகிறது. தடுப்பூசி பெறாதோர் பற்றிய தகவலை சேகரிக்கிறது. நகரில் 4,400

பெங்களூரு:பெங்களூரில் கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வார்டு வாரியாக தடுப்பூசி முகாம்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் நகரின் வார்டுகளில், 84 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சி சில நாட்களாக வார்டு மற்றும் பிளாக் வாரியாக ஆய்வு நடத்துகிறது. தடுப்பூசி பெறாதோர் பற்றிய தகவலை சேகரிக்கிறது. நகரில் 4,400 குடும்பங்கள் தடுப்பூசி பெறாதது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.நகரில் 100 சதவீதம் அளவில் இலக்கை எட்ட மாநகராட்சி முயற்சிக்கிறது. இதற்காக பல வழிகளை கையாள்கிறது.

ஆனால் பல்வேறு காரணங்களால், 4,400 குடும்பத்தினர் தடுப்பூசி பெற தயங்குகின்றனர். குறிப்பாக, குடிசைப்பகுதிகளில் இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆய்வு செய்ய மாநகராட்சி ஊழியர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், கதவை மூடிக்கொள்வதாக கூறப்படுகிறது.

பெங்களூரு மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தடுப்பூசி பெற்றால் காய்ச்சல் ஏற்படும்; பணிக்கு செல்ல முடியாது என காரணம் கூறி மறுக்கின்றனர். பின் விளைவு ஏற்படும் என்பதால் சில நாட்கள் மதுபானம் அருந்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும் என்பதாலும் பலரும் தடுப்பூசி பெற முன் வருவதில்லை.

சில பிளாக்குகளில் இது போன்றவர்கள் அதிகம் இருப்பதால், விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. தெற்கு மண்டலத்தில் 1,128 குடும்பங்கள், 780 குடும்பங்கள் தடுப்பூசி பெறவில்லை. நாங்கள் தடுப்பூசி முகாம்களில், மக்களுக்காக காத்திருக்க முடியாது. எனவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவோம். இன்னும் இதற்கான தேதி நிர்ணயிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X