காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் மீதுரேணுகாச்சார்யா கடும் காட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
துமகூரு:''ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவமதிப்பாக பேசும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ம.ஜ.த.,வின் குமாரசாமி போன்றவர்கள், தலிபான் பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள்,'' என முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா தெரிவித்தார். துமகூரின் சித்தகங்கா மடத்துக்கு, வந்த இவர், மடாதிபதியை சந்தித்தார். பின் ரேணுகாச்சார்யா கூறியதாவது:இந்த நாட்டை காப்பாற்றுவதே, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,

துமகூரு:''ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவமதிப்பாக பேசும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ம.ஜ.த.,வின் குமாரசாமி போன்றவர்கள், தலிபான் பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள்,'' என முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா தெரிவித்தார்.

துமகூரின் சித்தகங்கா மடத்துக்கு, வந்த இவர், மடாதிபதியை சந்தித்தார். பின் ரேணுகாச்சார்யா கூறியதாவது:இந்த நாட்டை காப்பாற்றுவதே, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தான். நாட்டில் எங்கு விபத்து, இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ்., பாதிக்கப்பட்ட மக்களின் உதவிக்கு செல்கிறது.

ஐ.ஏ.எஸ்., - கே.ஏ.எஸ்., படித்தவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., சிபாரிசு செய்ய முடியுமா. அவரவர் தகுதி, மதிப்பெண் அடிப்படையில், பதவி, வாய்ப்பு கிடைக்கும். இது குறித்து அரசியல் தலைவர்களுக்கு, குறைந்தபட்ச அறிவும் அவர்களுக்கு இல்லை. குமாரசாமி எதிர்பாராமல், இரண்டு முறை முதல்வரானவர். அவருக்கு தற்போது அதிகாரமும் இல்லை. விரக்தி மனப்போக்கில் பேசுகிறார். அவருக்கு புத்தி மாறியுள்ளது. இதனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

சிவகுமாரின் துக்ளக் தர்பாரை இன்னும் மறக்கவில்லை. இதற்கு முன் அவர், என்னென்ன செய்தார்; அமைச்சரான பின் என்னென்ன செய்தார் என்பது தெரியும். காங்கிரஸ் தலைவர்கள், ம.ஜ.த.,வின் குமாரசாமி தலிபான்களை போன்றவர்கள். இவர்களின் நடவடிக்கைக்கு, மக்கள்தக்கபாடம் புகட்டுவர்.

பா.ஜ., ஆட்சி காலத்தில், ஒரு இனக்கலவரம் கூட நடக்கவில்லை. பதவி நாற்காலிக்காக எதிர்க்கட்சியினர் தீ மூட்டுகின்றனர். எங்களுடையது விளக்கேற்றும் கலாசாரம். காங்கிரசுடையது கொள்ளி வைக்கும் கலாசாரம். அரசே மக்களின் வீட்டு வாசலுக்கு வந்து, மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்பதற்காக, அக்டோபர் 16ல் கிராமத்தில் தங்க திட்டமிட்டுள்ளோம்.

இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, வருவாய் துறை அமைச்சர் அசோக்கிடம், வேண்டுகோள் விடுத்துள்ளேன். கிராமத்தில் தங்க, ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X