எதிர்ப்பில் பொறுப்பாளர் நியமனம்!

Added : அக் 07, 2021
Share
Advertisement
எதிர்ப்பில் பொறுப்பாளர் நியமனம்!வாரிசு அரசியல் பூக்கட்சியில் இருக்க கூடாதென வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டா கண்டிப்போடு டில்லியில் போராடி எடிஜி மகனை முதல்வர் ஆக்க விடாமல் சிலர் தடுத்தாங்க. பின் எடிஜி அனுமதியோட தன்னோட ஜாதிக்காரரை, தனக்கு அடக்கமானவரை சிபாரிசு செய்து முதல்வராக பட்டாபிஷேகம் நடந்தது. எடிஜி எதிர்ப்பாளர்களை மெல்ல ஓரம் கட்ட செய்து வர்ராரு.இப்புடி

எதிர்ப்பில் பொறுப்பாளர் நியமனம்!

வாரிசு அரசியல் பூக்கட்சியில் இருக்க கூடாதென வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டா கண்டிப்போடு டில்லியில் போராடி எடிஜி மகனை முதல்வர் ஆக்க விடாமல் சிலர் தடுத்தாங்க. பின் எடிஜி அனுமதியோட தன்னோட ஜாதிக்காரரை, தனக்கு அடக்கமானவரை சிபாரிசு செய்து முதல்வராக பட்டாபிஷேகம் நடந்தது. எடிஜி எதிர்ப்பாளர்களை மெல்ல ஓரம் கட்ட செய்து வர்ராரு.இப்புடி இருக்கையில் இரண்டு தொகுதிகளோட இடைத் தேர்தலின் பொறுப்பாளர்கள் லிஸ்ட்டில் எடிஜி மகனான மாநிலத் துணைத் தலைவர் பெயரை காணோம். இதனால் பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாங்க.

முதல்வரின் 'ஸ்பெஷல் அட்டன்ஷனால்' ஹானகல் தொகுதி பொறுப்பாளராக சேர்த்தாங்க. எடிஜியை எதிர்த்து கட்சிக்குள்ளேயே குடைச்சலா இருந்த கும்பல், தேர்தல் பொறுப்பாளராக எடிஜி மகனை சேர்ந்ததால், பத்து பச்சை மிளகாயை கடித்தது போல அவர்களுக்கு காரம் தலைக்கு ஏறி போச்சாம்.இதனால், கட்சியை வசைப்பாடி வராங்க. பொறுப்பில் இருந்து நீக்க அழுத்தம் தராங்களாம். ஆனால், அது எடுபடாதுன்னு மல்லேஸ்வரம் ஆபிசில் பேசிக்கிறாங்க!

யோகமான 'மாஜி'யை காணல!

எடிஜி கேபினட்டில் மந்திரியா இருந்துக்கொண்டே அவருக்கு எதிர்ப்பா குரூப் சேர்த்த, சட்ட மேலவை உறுப்பினரான யோகமானவர், 'ஹெல்லி இத்தாரே கொத்தில்லா' ன்னு காவிக் காரங்க கிண்டலடிக்குறாங்க.எடிஜி கவர்மென்டை இவர் தான் உருவாக்கினாருன்னு 'கிங் மேக்கர்' என சொல்லி வந்தவர், மல்லாந்து படுத்து உமிழ்ந்தாரு. இருந்த மந்திரி பதவியையும் பறிச்சாச்சு. இப்போ அவர் இருக்கும் இடமே தெரியல. அவரை காணலையே!

தசரா வந்தாச்சு!

இனாம் வாங்க, தசரா வந்தாலே சில பேருக்கு கொண்டாட்டம் தான். அதிலும், அரசியல்வாதிகளும், தங்களது கவுரவத்தை 'இனாம்' மூலம் தான் தக்க வைத்துக் கொள்வாங்க. கார்ப்பரேஷன், அசம்பிளி எலக் ஷன் வரப்போகுது. நம்மை விட்டு யாரும் நகராமல் பாத்துக்க வழக்கத்தை விட ஒத்தையா கொடுத்த நோட்டுகளை கத்தையா கொடுக்கவும் தலைவர்கள் தயாராக இருக்காங்க.எலக் ஷன் கம் கலெக் ஷன் ஜோரா இருக்குமென கட்சிக்காரங்க குஷியா இருக்காங்க.

சிலப்பேரு, ரெசார்ட் விருந்தையும் தயார் செய்து, சில சரக்குகளாலும் குளிப்பாட்ட போறாங்களாம்!

செயல்படுவது எப்போது?

குயின்ஸ் சாலையில் மாநில கை கட்சியோட ஆபிஸ் இருக்குது. இதோட புதிய ஆபிசை இதன் பக்கத்திலேயே கட்டினாங்க. பில்டிங் உருவாகி திறப்பு விழாவை பேரளவில் மட்டும் நடத்தினாங்க. பல பல மாதமாச்சு. புதிய கட்டடம் முழுமையா தொறக்கபடல.இரண்டு தலைவர்கள் மாறி மூன்றாவது தலைவர் இருக்கிறார். இவரது பதவி காலத்திலாவது புது ஆபிஸ் திறப்பாங்களான்னு கைக்கார தொண்டர்கள் எதிர்ப்பார்க்கிறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X