குழந்தை இறந்து விடுமே:கர்ப்பிணி தற்கொலை!

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஹாசன்:குழந்தை பிறந்ததும் இறந்து விடும் என்ற பயத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.ஹாசன் ஸ்ரவணபெளகோலா அருகே உள்ள ராஜாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன், 35. இவருக்கும், மாண்டியா கே.ஆர்.பேட் அருகே உள்ள சாசலுகொப்பலு கிராமத்தை சேர்ந்த ஷில்பா, 30 என்பவருக்கும் நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஷில்பாவுக்கு இதற்கு முன் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, இரண்டு

ஹாசன்:குழந்தை பிறந்ததும் இறந்து விடும் என்ற பயத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

ஹாசன் ஸ்ரவணபெளகோலா அருகே உள்ள ராஜாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன், 35. இவருக்கும், மாண்டியா கே.ஆர்.பேட் அருகே உள்ள சாசலுகொப்பலு கிராமத்தை சேர்ந்த ஷில்பா, 30 என்பவருக்கும் நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஷில்பாவுக்கு இதற்கு முன் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, இரண்டு வாரத்தில் உயிரிழந்தன.

தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். எட்டு மாத கர்ப்பிணியான இவருக்கு, இந்த முறை பிறக்கும் குழந்தையும் அதிக நாள் இருக்காது; 10 நாட்களுக்குள் இறந்து விடுமோ என்ற பயம் ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த ஷில்பா நேற்று முன் தினம் வீட்டின் சமையலறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X