பொது செய்தி

இந்தியா

பாக்கு திருட்டை கட்டுப்படுத்த உதவும் எண்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஷிவமொகா:பாக்கு திருட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், விவசாயிகளின் நலனுக்காக ஷிவமொகாவில் உதவி எண் துவங்கப்பட்டுள்ளது. ஷிவமொகா மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில், பாக்கு திருட்டு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைகின்றனர். இதற்கு கடிவாளம் போடும் நோக்கில் ஷிவமொகா போலீசார் சில விதிமுறைகள் வகுத்துள்ளனர். போலீஸ்துறை

ஷிவமொகா:பாக்கு திருட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், விவசாயிகளின் நலனுக்காக ஷிவமொகாவில் உதவி எண் துவங்கப்பட்டுள்ளது.

ஷிவமொகா மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில், பாக்கு திருட்டு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைகின்றனர். இதற்கு கடிவாளம் போடும் நோக்கில் ஷிவமொகா போலீசார் சில விதிமுறைகள் வகுத்துள்ளனர். போலீஸ்துறை வெளியிட்டுள்ள விதிமுறைகள்:

* பாக்கை திறந்த வெளியில் சேகரித்து வைக்காமல் கிட்டங்கி அல்லது அறைகளில் சேகரிக்க வேண்டும்

* பாக்கு சேகரித்து வைத்த கிட்டங்கி, அறைகளுக்கு பூட்டு போட வேண்டும்

* பாக்கு சேகரித்த, உலர்த்திய இடங்கள், வெளிச்சம் இருப்பது அவசியம்

* கிட்டங்கி பகுதிகளில் வாகனங்கள் எளிதில் நுழையாமல் கேட்கள் பொருத்த வேண்டும்

* கிட்டங்கி அல்லது அறையில் பாக்கு திருட முயற்சித்தால் எச்சரிக்க வசதியாக அலாரம் வசதி செய்ய வேண்டும்

* கிட்டங்கிகள், அறைகளின் சுற்றுப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

* சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்களை கண்டால், உடனடியாக உதவி எண் 112, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 94808 03300 என்ற இடங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X