பொது செய்தி

இந்தியா

கொலு பொம்மைகள் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு:முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் இம்முறை, கொலு பொம்மைகள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. விதவிதமான பொம்மைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. நவராத்திரியில், வீடுகளில் பொம்மை கொலு வைப்பது ஐதீகம். இதற்காகவே புதுப்புது பொம்மைகளை, வியாபாரிகள் அறிமுகம் செய்வர். வழக்கம் போன்று இம்முறையும் பெங்களூரின் மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், பசவனகுடி, ஜெயநகர், விஜயநகர்,

பெங்களூரு:முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் இம்முறை, கொலு பொம்மைகள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

விதவிதமான பொம்மைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. நவராத்திரியில், வீடுகளில் பொம்மை கொலு வைப்பது ஐதீகம். இதற்காகவே புதுப்புது பொம்மைகளை, வியாபாரிகள் அறிமுகம் செய்வர். வழக்கம் போன்று இம்முறையும் பெங்களூரின் மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், பசவனகுடி, ஜெயநகர், விஜயநகர், வி.வி.புரம் என பல்வேறு இடங்களில் பொம்மை விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டு, கொரோனா பீதி மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளால், பொம்மைகள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை. விற்பனையும் குறைந்தது. இம்முறை கொரோனா குறைந்துள்ளதால் கொலு வைக்க பொம்மைகள் வாங்குகின்றனர்.முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், பொம்மைகள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடவுள் சிலைகள், திருமணம், நிச்சயதார்த்தம், பெயர் சூட்டல், பண்டிகைகள், திருவிழாவை பிரதிபலிக்கும் பொம்மைகள்.போலீஸ், ராணுவம், டாக்டர் பொம்மைகள் உட்பட, பல விதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 200 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில், பொம்மை விற்கப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கோல்கத்தாவிலிருந்து பொம்மைகள் பெங்களூரு வந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X