நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு:மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது மொபைல் போனில் சக ஊழியருடன் எடுத்து கொண்ட, 'நெருக்கமான' போட்டோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பெங்களூரு தேவனஹள்ளி தனியார் மருத்துவமனையில், ஆந்திராவை சேர்ந்த நர்ஸ் ஸ்வேதாஞ்சலி, 23, ஆகஸ்ட் 17ல் தற்கொலை செய்து கொண்டார்.மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார் என அப்போது

பெங்களூரு:மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது மொபைல் போனில் சக ஊழியருடன் எடுத்து கொண்ட, 'நெருக்கமான' போட்டோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு தேவனஹள்ளி தனியார் மருத்துவமனையில், ஆந்திராவை சேர்ந்த நர்ஸ் ஸ்வேதாஞ்சலி, 23, ஆகஸ்ட் 17ல் தற்கொலை செய்து கொண்டார்.மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார் என அப்போது கூறப்பட்டது. தேவனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த ஸ்வேதாஞ்சலி மொபைல் போனை ஆய்வு செய்ததில், போலீசாருக்கு சில போட்டோக்கள் கிடைத்துள்ளன.மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியரான கிரிஷுடன் ஸ்வேதாஞ்சலி நெருக்கமாக படுக்கையறையில் இருப்பது; பல இடங்களில் ஜோடியாக எடுத்து கொண்ட போட்டோக்கள் கிடைத்துள்ளன.இந்த போட்டோக்கள் ஸ்வேதாஞ்சலியின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.

போலீசில் அவர்கள் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: கிரிஷ், எங்கள் மகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டுள்ளார். அவருக்கு திருமணமாகி இருந்தாலும், என் மகளை தன் வலையில் விழ வைத்துள்ளார்.கிரிஷ் தான் என் மகளை மருத்துவமனையில் கொலை செய்து உள்ளார். என் மகளின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர்.

போலீசார், கிரிஷ் மீது வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர். உயிரிழந்த ஸ்வேதாஞ்சலிக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது. திருமணத்துக்கு சில நாட்கள் இருக்கும் வேளையில் அவர் தற்கொலை செய்து கொண்டது, இரு வீட்டாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X