ஐந்து மாடி கட்டடம் இடிந்தது: உயிர் சேதம் தவிர்ப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில் ஐந்து மாடி கட்டடம் இடிந்தது. குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.பெங்களூரு கஸ்துாரி நகர் இரண்டாவது கிராசில், வி.ஜே., இன்பினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. ஐந்து மாடி கட்டடமான இதில் சில குடும்பத்தினர் வசித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன் கட்டடத்தின் அடித்தளம் சேதம் அடைந்த
ஐந்து மாடி கட்டடம் இடிந்தது: உயிர் சேதம் தவிர்ப்பு

பெங்களூரு:பெங்களூரில் ஐந்து மாடி கட்டடம் இடிந்தது. குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு கஸ்துாரி நகர் இரண்டாவது கிராசில், வி.ஜே., இன்பினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. ஐந்து மாடி கட்டடமான இதில் சில குடும்பத்தினர் வசித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன் கட்டடத்தின் அடித்தளம் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து பி.பி.எம்.பி., அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் குடியிருந்தவர்கள் வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்புவாசிகள் வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கஸ்துாரி நகர் போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரில் தொடர்ந்து கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்து வருவது, அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X