எம்.பி., கார் மோதி விவசாயி படுகாயம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சண்டிகர்:ஹரியானாவில் பா.ஜ., - எம்.பி.,யின் கார் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார். ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்பாலா அருகே நடந்த நிகழ்ச்சியில், குருஷேத்ரா தொகுதி பா.ஜ., - எம்.பி., நயாப் சைனி, ஹரியானா மாநில அமைச்சர் மூல்சந்த் ஷர்மா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடிய விவசாயிகள், மத்திய அரசின் மூன்று புதிய

சண்டிகர்:ஹரியானாவில் பா.ஜ., - எம்.பி.,யின் கார் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்பாலா அருகே நடந்த நிகழ்ச்சியில், குருஷேத்ரா தொகுதி பா.ஜ., - எம்.பி., நயாப் சைனி, ஹரியானா மாநில அமைச்சர் மூல்சந்த் ஷர்மா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடிய விவசாயிகள், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.

நிகழ்ச்சி முடிந்து எம்.பி., உட்பட அனைவரும் கார்களில் புறப்பட்டனர். அப்போது, எம்.பி.,யின் கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் ஒரு விவசாயி பலத்த காயம் அடைந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில், உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றிய விவகாரம் நாடு முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹரியானாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X