பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 22 பேர் பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
கராச்சி:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலியாகினர்; 300 பேர் காயம் அடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைகள் சூழ்ந்த பகுதியான ஹர்னாய் மாவட்டத்தை மையமாக
 பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 22 பேர் பலி

கராச்சி:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலியாகினர்; 300 பேர் காயம் அடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைகள் சூழ்ந்த பகுதியான ஹர்னாய் மாவட்டத்தை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த ஹர்னாய், குவெட்டா, சிபி, பிஷின் உட்பட எட்டு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆறு மாவட்டங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து, துாங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டைவிட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். ஏராளமான மண் வீடுகள் இடிந்து விழுந்தன. சில கட்டடங்கள் சரிந்ததில் 22 பேர் பலியாகி உள்ளதாகவும், 300 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X