பொது செய்தி

இந்தியா

மூன்று மாதங்கள் உஷார்: அரசு எச்சரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அக்., நவ., மற்றும் டிசம்பரில் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை மக்கள் தவிர்க்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா இரண்டாவது அலை குறைந்தாலும், தினமும் 20 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக இணை செயலர் லவ் அகர்வால்

புதுடில்லி:பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அக்., நவ., மற்றும் டிசம்பரில் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை மக்கள் தவிர்க்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை குறைந்தாலும், தினமும் 20 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக இணை செயலர் லவ் அகர்வால் கூறியதாவது:நடப்பு அக்., மற்றும் நவ., டிசம்பர் மாதங்களில் பண்டிகைகள், திருமண விழாக்கள் ஆகியவை அதிக அளவில் நடக்க உள்ளன. அவற்றில் கலந்து கொள்ள மக்கள் அதிகம் கூடுவர்.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதை கருதி, அதிகம் கூடும் கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். பொருட்களை 'ஆன்லைன்' வாயிலாக வாங்கவும். தவிர்க்க இயலாத பட்சத்தில் வெளியே சென்றால்,முக கவசம், சமூக இடைவெளி ஆகிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


93 கோடி 'டோஸ்'

நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் நேற்று கூறியதாவது:நம் நாட்டில் இதுவரை 93 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 71 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 27 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X