காஷ்மீரில் மீண்டும்! பயங்கரவாதம் தலை தூக்குகிறதா? : 5 நாளில் 7 பேர் கொலை!

Updated : அக் 09, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (9+ 19)
Share
Advertisement
ஸ்ரீநகர் :ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலை துாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில், பயங்கரவாதிகளால் பொதுமக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமூக ஒற்றுமையை சீரழிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் செயல்படுவதாக போலீசார் குற்றஞ் சாட்டியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்,
காஷ்மீர், பயங்கரவாதம்,5 நாள் 7 பேர் ,கொலை!


ஸ்ரீநகர் :ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலை துாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில், பயங்கரவாதிகளால் பொதுமக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமூக ஒற்றுமையை சீரழிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் செயல்படுவதாக போலீசார் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதன்பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. பயங்கரவாதத்தால் 1980 முதல் பாதிக்கப்பட்டு வந்த ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், பாதுகாப்பு படையினரும், போலீசாரும் எடுத்த கடும் நடவடிக்கைகளால் பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டது.


காட்டுமிராண்டித்தனம்ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை துாண்டும் பாகிஸ்தானின் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதல்களும் குறைந்துவிட்டன. இதனால், ஜம்மு - காஷ்மீரில் பல ஆண்டுகளுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது. ஹிந்து கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் துவங்கின. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளனர். ஸ்ரீநகர் சட்டாபால் பகுதியைச் சேர்ந்த மஜித் அகமது கோஜ்ரி என்பவரை, 2ம் தேதி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அன்று இரவே ஸ்ரீநகர் படமாலு பகுதியைச் சேர்ந்த முகமது ஷிப் தார் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

கடந்த 5ல் ஸ்ரீநகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் மூன்று பேர் பலியாகினர். ஸ்ரீநகரில் மருந்துக் கடை நடத்தி வந்த மக்கன்லால் பிந்த்ரூவை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள், அடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்ரீநகர் ஹவால் பகுதியில், தெருவோர வியாபாரி வீரேந்தர் என்பவரை சுட்டுக் கொன்றனர்.
இதற்கு அடுத்த சில நிமிடங்களில் பந்திபோராவில் முகமது ஷபி லோன் என்பவரை சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், ஒரு ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியரை பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகர் சங்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள், பயங்கரவாதிகள் நேற்று காலை புகுந்தனர். அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஜம்முவைச் சேர்ந்த ஆசிரியர் தீபக் சந்த், ஆசிரியை சுபீந்தர் கவுர் ஆகியோரை சுட்டுக் கொன்றனர். இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் பொதுமக்கள் ஏழு பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளது, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலை துாக்குகிறதோ என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்திஉள்ளது.இதற்கிடையே ஆசிரியர்கள் கொல்லப்பட்டதற்கு, பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்ரீநகரில் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை கண்டிக்க வார்த்தைகள் இல்லை' என
கூறியுள்ளார்.


எடுபடவில்லைமுன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி வெளியிட்ட அறிக்கையில், 'ஜம்மு - காஷ்மீர் நிலைமை மோசமாகி வருகிறது. 'காஷ்மீர் விவகாரத்தை, தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்கான கறவை மாடாக மத்திய அரசு பயன்படுத்துகிறது' என கூறியுள்ளார்.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் அட்லப் தாக்குர் கூறுகையில், ''ஆசிரியர்களுக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. அவர்களை கொன்றது காட்டுமிராண்டி தனமானது,'' என்றார். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை, பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் பல முறை பேசியும், சிறிதும் எடுபடவில்லை. காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது. அதனால், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதில் பாகிஸ்தானுக்கு பங்குள்ளது என, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிஅரசு பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது பற்றி, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., தில்பக் சிங் கூறியதாவது:காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டித்தனமானது. அப்பாவி மக்களை கொன்று, சமூகத்தில் ஒற்றுமையை சீரழித்து, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, காஷ்மீரில் அமைதியை கெடுக்க வேண்டும் என்பது தான் பயங்கரவாதிகளின் நோக்கம்.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாதிகளின் செயல்கள், காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம். பாகிஸ்தான் சொல்படி பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் சதிகளுக்கு காஷ்மீர் மக்கள் இனி பலியாக மாட்டார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.


ஆயுத புதையல் பறிமுதல்ஜம்மு - காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில், பாகிஸ்தானிலிருந்து 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வழியாக ஆயுதங்கள், போதைப் பொருட்களை பயங்கரவாதிகள் வீசிச் செல்வது அதிகரித்துள்ளது. இதை எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை பயங்கரவாதிகள் கடத்தி வர முயற்சித்தனர். இதை தடுத்த எல்லை பாதுகாப்பு படையினர், ஆயுதப் புதையலை கைப்பற்றினர். அதில் நான்கு துப்பாக்கிகள், 232 குண்டுகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் இருந்ததாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


மத்திய அரசு தோல்விகாஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு, சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படவும் இல்லை; நிறுத்தப்படவும் இல்லை. ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.
ராகுல், எம்.பி., காங்கிரஸ்

Advertisement
வாசகர் கருத்து (9+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-அக்-202113:58:24 IST Report Abuse
Balaji Radhakrishnan காஷ்மீரில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரை சுற்றி பாதுகாப்பு படைகள் நிறுத்த வேண்டும். பாதுகாப்பு படைகள் கையில் மிக அதிக செயல் திறன் கொண்ட துப்பாக்கி கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-அக்-202111:55:24 IST Report Abuse
sahayadhas யூனியனாக மாற்றியும் , பல குழப்பங்கள் நடத்தியும் சரியாக வில்லையா? இன்னும் என்ன செய்யலாம் அமி பாய்
Rate this:
Anand - chennai,இந்தியா
08-அக்-202113:37:06 IST Report Abuse
Anandஅதற்கு முதல், இங்குள்ள வாடிகன் கைக்கூலிகளை அழித்தொழிக்கவேண்டும்....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
08-அக்-202110:25:37 IST Report Abuse
sankar இப்போ நாம கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X