ராணுவ கல்லுாரி நுழைவுத் தேர்வு மாணவியருக்கு கோர்ட் அனுமதி

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வை எழுத, மாணவியருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் சேர்ந்து படிக்க ஏழாம் வகுப்பு படிக்கும் அல்லது முடித்துள்ள, பதினொன்றரை வயது முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி

புதுடில்லி:டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வை எழுத, மாணவியருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் சேர்ந்து படிக்க ஏழாம் வகுப்பு படிக்கும் அல்லது முடித்துள்ள, பதினொன்றரை வயது முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான நுழைவு தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே ராணுவ கல்லுாரியில் சேர முடியும்.

இந்த கல்லுாரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வு எழுத மாணவியரையும் அனுமதிக்க வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் நடந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது:தேசிய ராணுவ அகாடமியில் பெண்களை சேர்க்க கடந்த மாதம் மத்திய அரசு அனுமதியளித்தது. ராணுவ கல்லுாரி நுழைவுத் தேர்வு எழுத மாணவியரை அனுமதிக்க மத்திய அரசு தயாராக தான் உள்ளது.

எனினும் ராணுவ கல்லுாரியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, டிச., 18ல் நடக்க உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதனால் 2023ம் ஆண்டு முதல், ராணுவ கல்லுாரியில் மாணவியர் சேர்க்கப்படுவர்.இவ்வாறு பதில் மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: தேசிய ராணுவ அகாடமியில் சேர பெண்களுக்கு அனுமதி வழங்கி, பெண்கள் முன்னேற்றத்தில் மத்திய அரசு பெரிய மைல் கல்லை கடந்துள்ளது. ராணுவ கல்லுாரி நுழைவுத் தேர்வு எழுத மாணவியருக்கு அனுமதி வழங்கி, மேலும் ஒரு அடி கூடுதலாக வைக்க வேண்டும்.

அதனால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ராணுவ கல்லூரியில் மாணவியர் சேருவதற்கு வசதியாக, டிசம்பரில் நடக்கும் நுழைவுத் தேர்வை எழுத மாணவியரை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X