பொது இடம், சாலைகளில் உள்ள சிலைகளை அகற்ற... உத்தரவு!

Updated : அக் 08, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை : அனுமதியின்றி சட்டவிரோதமாக, பொது இடங்கள், சாலைகள், அரசு நிலங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, மூன்று மாதங்களுக்குள் அடையாளம் கண்டு; ஆறு மாதத்திற்குள் அகற்றி சீர் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றும்படியும் கண்டித்துள்ளது.வேலுார் மாவட்டம் அரக்கோணம் தாலுகா, கைனுார் கண்டிகை
பொது இடம், சாலைகள்,சிலைகள்,அகற்ற, உத்தரவு!

சென்னை : அனுமதியின்றி சட்டவிரோதமாக, பொது இடங்கள், சாலைகள், அரசு நிலங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, மூன்று மாதங்களுக்குள் அடையாளம் கண்டு; ஆறு மாதத்திற்குள் அகற்றி சீர் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றும்படியும் கண்டித்துள்ளது.

வேலுார் மாவட்டம் அரக்கோணம் தாலுகா, கைனுார் கண்டிகை கிராமத்தில், அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அதை அகற்றும்படி அரக்கோணம் தாசில்தார், 'நோட்டீஸ்' அனுப்பினார்.


விதிகளை மீறியதுஅதை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பஞ்சாயத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதாகவும், சிலையால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.அரசு தரப்பில் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, ''மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அனுமதி பெறப்படவில்லை. விதிகளை மீறியது மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளும் மீறப்பட்டு உள்ளன,'' என்றார்.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில், 'பொதுச் சாலை மற்றும் நடைபாதைகளில் சிலைகள் நிறுவ; கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது' என்று கூறியுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதை அமல்படுத்துவதை மாநில தலைமை செயலரும், யூனியன் பிரதேச நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.தலைவர்களின் சிலையால், தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கலவரங்கள் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. சாதாரண பொது மக்கள் அமைதியான வாழ்வை விரும்புகின்றனர்.அரசியல் கட்சிகள், மதம், ஜாதி, மொழி அமைப்புகளின் கொண்டாட்டங்களால், சாதாரண மக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதுஅரசின் கடமை.


புகழுக்கு பாதிப்புஎந்த சூழ்நிலையிலும், ஜாதி ரீதியில் தலைவர்களை அடையாளப்படுத்தக் கூடாது. சமுதாய மேம்பாட்டுக்காக, அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். ஜாதி, மதம், சமூக ரீதியில் மக்களை பிரிக்க எந்த தலைவரும் முயற்சிக்கவில்லை.எனவே, ஒரு தலைவரை ஜாதி ரீதியில் அடையாளப்படுத்துவது, அவரது செல்வாக்கு, புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைவர்களுக்கு ஜாதி வர்ணம் கொடுத்து, அவர்களின் செல்வாக்கை மாற்ற முயல்கின்றனர். மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தவும் முயல்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கையை ஏற்க முடியாது.சாலையின் நடுவிலும், பொது இடங்கள், அரசு நிலங்கள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களிலும், சிலைகளை அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள்வைக்கின்றன. இதனால், போக்குவரத்துக்கும், அந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் இடையூறு உள்ளது.சிலைகளை முறையாக பராமரிப்பதும் இல்லை. தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, அவமரியாதை செய்யும் நிகழ்வுகளால், வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. மக்களின் மனநிலையை மாற்றுவதற்கான அணுகுமுறை தேவை.ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், மத, சமூக அமைப்புகளுக்கும், தங்கள் தலைவர்களின் பெருமையை போற்ற, கொண்டாட உரிமை உள்ளது.


தனிப்பட்ட இடங்களில் சிலைகளை நிறுவி, விருப்பப்படி கொண்டாடி கொள்ளலாம். பொது இடங்களில் சிலை நிறுவும்போது, மக்களை பற்றி அக்கறை கொள்ள வேண்டும். எனவே, பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலம், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், கட்டுமானங்களை, மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும்.
பின், அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள சிலைகள், கட்டுமானங்களை, சட்ட நடைமுறையை பின்பற்றி அகற்ற வேண்டும்.

பொது மக்களின் உரிமைகளை மீறும் வகையில், பாதிக்கும் வகையில், பொது இடங்களில் சிலைகள் நிறுவ, கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது. சிலைகள் நிறுவ, கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி அளிப்பதற்கு, உரிய வழிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும்.புதிதாக சிலை வைக்கவும், அகற்றப்பட்ட சிலைகளை வைக்கவும், 'தலைவர்கள் பூங்கா' என்ற பெயரில் ஒரு பகுதியில் நிலம் ஒதுக்க வேண்டும். அங்கு சிலைகளை பராமரிப்பதற்கான செலவை, சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும்.ஆறு மாதங்களில் இந்த உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, தாசில்தாரின் உத்தரவில் எந்த குறைபாடும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்
படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் அப்போ பைசாக்கு பிரயோஜனம் சிலைங்கள தூக்கணுமா? சூப்பர். அந்த நல்ல நாள் எந்நாளோ. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
08-அக்-202121:33:48 IST Report Abuse
Nagercoil Suresh 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கல்லறைகளை உடைத்துவிட்டு அதே இடத்தில் புது கல்லறைகளை கட்ட அனுமதிப்பதற்கு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். வளர்ந்த நாடுகளில் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது...
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
08-அக்-202121:24:18 IST Report Abuse
s t rajan எந்தப் பெரிய அரசியல்வாதிக்கும், சினிமாக்காரர்களுக்கும் சிலை வணக்கம் கூடாது என்று உத்தரவிடுங்கள். அதே போல் யாருக்கும் எங்கேயும் சமாதி வைக்கக் கூடாது என்றும் ஆணையிடுங்கள். மெரினா மறித்தவர்களின் கூடாரமாக ஆகி விட்டது. அவரவர்கள் அவர்களது சொந்த நிலப்பரப்புகளில் சமாதி என்ன கோயிலே வைத்துக் கொள்ளட்டும். டெல்லியில் நேரு, இந்திரா போன்றோர்களின் சமாதி நல அளவை குறையுங்கள். உயிர் வாழ்பவர்களுக்கு இடமில்லாத போது இறந்தவர்களுக்கு ஏன் அத்தனை பரப்பளவில் சமாதி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X