அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் அரசியல் 16ல் சசிகலா துவக்கம்?

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :'அ.தி.மு.க., தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்' என்று கூறி வந்த சசிகலா, வரும், 16ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.அதன்பின், அமைதியாக
மீண்டும்  16ல் சசிகலா துவக்கம்?

சென்னை :'அ.தி.மு.க., தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்' என்று கூறி வந்த சசிகலா, வரும், 16ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.

அதன்பின், அமைதியாக இருந்த சசிகலா, ஜூலை மாதத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் போனில் பேசி வந்தார். விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருடன் பேசியவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். அதனால், சசிகலாவுடன் பேச பயந்தனர்.

அடுத்த கட்டமாக அவர் பேசும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். கொரோனா குறைந்ததும், கட்சியினரை நேரில் சந்திக்க போவதாக தெரிவித்தார்.

அதன்படி, 16ம் தேதி, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மற்றும் ராமாபுரம் தோட்டத்திற்கு செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-அக்-202114:28:02 IST Report Abuse
vpurushothaman சில பேருக்கு கெட்டும் புத்தி வருவதில்லை என்பது இதுதானோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X