பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்

Updated : அக் 09, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும்
நிலக்கரி சுரங்கம்,  சும்மா  இருந்த மின் வாரியம்

சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.

பற்றாக்குறை நிலக்கரி, தனியாரிடம் வாங்கப்படுகிறது. மின் வாரியம், புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. இதற்காக ஒடிசாவில் 90 கோடி டன் இருப்பு உடைய சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை, மத்திய அரசு 2016ல் ஒதுக்கியது.அங்கு சுரங்கத்தை மேம்படுத்தி, நிலக்கரியை வெட்டி எடுத்து வரும் பணியில் மின் வாரியம் முழுவீச்சில் ஆர்வம் காட்டவில்லை.

அதேசமயம் தனியாரிடம் ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரை நிலக்கரி வாங்கப்பட்டது. இதற்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டது.நீண்ட இழுபறிக்கு பின் சந்திரபிலா சுரங்கத்தை மேம்படுத்தி, தமிழகத்திற்கு ஆண்டுக்கு 1 கோடி டன் என, 35 ஆண்டுகளுக்கு நிலக்கரி அனுப்பும் பணிகளை, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக மேற்கொள்ள, மின் வாரியம் 2019 இறுதியில் 'டெண்டர்' கோரியது.

திட்ட செலவு 21 ஆயிரம் கோடி ரூபாய். டெண்டரில் ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்றதால், டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதே பணிக்கு 2020 இறுதியில் மீண்டும் டெண்டர் கோரப் பட்டது. திட்ட செலவு 25 ஆயிரம் கோடி ரூபாய்.


தீவிர கவனம்

அதிலும், ஒரு நிறுவனம் கூட பங்கேற்காததால், அந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. மழை உள்ளிட்ட காரணங்களால், மத்திய தொகுப்பில் மின் வாரியத்திற்கு நிலக்கரி அனுப்புவது குறைந்துள்ளது.இதனால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை நாடு முழுதும் நிலவுகிறது.

இருப்பினும், மத்திய அரசு ஒதுக்கிய உடனே, மின் வாரியம் சந்திரபிலா சுரங்கத்தை மேம்படுத்தி, நிலக்கரி எடுக்கும் பணியை துவக்கி இருந்தால், தற்போது அங்கிருந்து தேவைக்கு ஏற்ப நிலக்கரி எடுத்து வந்திருக்கலாம்; தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.அந்த நிலக்கரியை பயன்படுத்தி, அனல் மின் நிலையங்களில் 24 மணி நேரமும் முழு அளவில் மின் உற்பத்தி செய்திருக்க லாம்.

இதனால், தனியாரிடம் அதிக மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டு இருக்காது. நிதி நெருக்கடியும் குறையும்.எனவே, இனியும் தாமதிக்காமல், சந்திரபிலாவில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் பணிகளில், வாரியம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
08-அக்-202117:22:48 IST Report Abuse
vbs manian கஷ்டப்பட்டு சுரங்கத்தை மேம்படுத்தி நிலக்கரி எடுத்தால் கமிஷன் எப்படி வரும்.சுரங்கம் கரி கொடுக்கும். காசு தராதே.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202114:10:34 IST Report Abuse
duruvasar இன்னும் விலை படியலைங்க. தோண்ட தோண்ட வருமான்னு மைல்டா ஒரு டவுட்டும் இருக்காம். சுரங்கத்தின் ஆழம் குறைவாக இருப்பதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுட்டாங்களாம். அணில் இருக்கும்வரை பிரச்சனை இல்லை உடுங்க.
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
08-அக்-202113:43:04 IST Report Abuse
rasaa Purchasing through privates makes babus happy and richer.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X