பொது செய்தி

தமிழ்நாடு

பீமா ஜுவல்லர்ஸ் ஷோரூம் தி.நகரில் துவக்கம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:தங்க நகைகள் விற்பனையில் முன்னணியில் உள்ள பீமா ஜுவல்லர்ஸ், சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், 12 ஆயிரம் சதுர அடியில், நான்கு தளங்களுடன் கூடிய புதிய ஷோரூமை துவக்கியுள்ளது.இதுகுறித்து, சென்னையில் நேற்று, பீமா ஜுவல்லர்ஸ் இயக்குனர் விஷ்ணு பட் கூறியதாவது: எங்கள் நிறுவனம் 1925ல் இருந்து, மக்களின் நம்பிக்கைக்கு உரிய தங்க நகைகளை விற்பனை செய்து
 பீமா ஜுவல்லர்ஸ் ஷோரூம் தி.நகரில் துவக்கம்

சென்னை:தங்க நகைகள் விற்பனையில் முன்னணியில் உள்ள பீமா ஜுவல்லர்ஸ், சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், 12 ஆயிரம் சதுர அடியில், நான்கு தளங்களுடன் கூடிய புதிய ஷோரூமை துவக்கியுள்ளது.

இதுகுறித்து, சென்னையில் நேற்று, பீமா ஜுவல்லர்ஸ் இயக்குனர் விஷ்ணு பட் கூறியதாவது: எங்கள் நிறுவனம் 1925ல் இருந்து, மக்களின் நம்பிக்கைக்கு உரிய தங்க நகைகளை விற்பனை செய்து வருகிறது.


மணிமகுடம்

தற்போது கர்நாடகா மாநிலம், பெங்களூரு, மங்களூரு, உடுப்பி, ஹாசன், ஷிவமோகா, விஜயவாடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 40க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் உள்ளன. நாட்டில் தங்கத்திற்கு தேவை உள்ள நகரங்களின் பட்டியலில், சென்னை முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை, சென்னையில் தான் அதிகளவு தங்கம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யப்படுகிறது. நகைகளுக்கான மணிமகுடமாக தி.நகர் திகழ்கிறது.எனவே, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய, பீமா ஜுவல்லர்ஸ் புதிய ஷோரூம் துவக்கப்பட்டுள்ளது.அங்குள்ள நகைகள், 'பி.ஐ.எஸ்., - 916 - ஹால்மார்க்' தரத்தில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

எங்களின் நகைகள் துாய்மை மற்றும் தரத்தில் தனித்துவம் மிக்கதாக இருக்கும். திறப்பு விழா சலுகையாக, கிராம் தங்கத்தின் குறைந்தபட்ச விலை 3,899 ரூபாய்.வாங்கும் ஒவ்வொரு தங்க ஆபரணத்திற்கும், ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப் படும்.


தள்ளுபடி

பழைய நகை கொடுத்து, புதிய தங்கம் வாங்கும் போது கிராமுக்கான தொகையுடன் கூடுத லாக 100 ரூபாய் வழங்கப்படும்.வைரம் காரட் ஒன்றிற்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். வெள்ளிக்கான செய்கூலியில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

பிறந்த குழந்தை முதல், முதியவர்களுக்கான அனைத்து ஆபரணங்களும் கிடைக்கும். வாடிக்கையாளர் பாதுகாப்பிற்காக, ஷோரூமில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப் பட்டு உள்ளன. 'வீடியோ கால்' வழியாக வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கலாம்.மேலும், பீமா ஜுவல்லர்ஸ் இணையதளம் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய 'ஆன்லைன்' தளங்களிலும் நகைகளை வாங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X