கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நகைகளை உருக்க தடை கோரி மனு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:கோவில் நகைகளை உருக்க தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்த மனு:கோவில் நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி, தேசிய வங்கியில் டிபாசிட் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, செப்., 22ல் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.ஹிந்து

சென்னை:கோவில் நகைகளை உருக்க தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்த மனு:கோவில் நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி, தேசிய வங்கியில் டிபாசிட் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, செப்., 22ல் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

ஹிந்து தர்மப்படி, கோவில்களுக்கு நிலம், பணம், தங்கம் வழங்குவது உண்டு. அரசர்கள், ஜமீன்தாரர்கள், நிலங்களையும், ஆபரணங்களையும் வழங்கி உள்ளனர். அறநிலையத்துறை நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும்; வருவாய் நோக்கில் இருக்கக் கூடாது.

கோவில் நகைகளை உருக்க, அரசுக்கு அதிகாரம் இல்லை. மத விஷயங்களில் அரசு குறுக்கிட, அறநிலையத்துறை சட்டம் அனுமதிக்கவில்லை. நகைகள் தொடர்பாக, எந்த பதிவேடுகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. எனவே, கோவில் நகைகளை உருக்கக் கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும். அறநிலையத் துறையின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X