கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை,:மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையை அடுத்த குருசுவிளையை சேர்ந்தவர் ராஜாசிங்கின் மனைவி டெல்பின், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரியில் மருத்துவக் கல்லுாரி துவக்க இருப்பதாக, 2012ல் சிலர் என்னிடம் தெரிவித்தனர். இதற்காக,

சென்னை,:மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையை அடுத்த குருசுவிளையை சேர்ந்தவர் ராஜாசிங்கின் மனைவி டெல்பின், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரியில் மருத்துவக் கல்லுாரி துவக்க இருப்பதாக, 2012ல் சிலர் என்னிடம் தெரிவித்தனர். இதற்காக, 'உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்; அதற்கு வட்டி வழங்கப்படும்; உரிய நேரத்தில் பணம் திருப்பி கொடுக்கப்படும்' என்றனர்.

அதை நம்பி, 3 லட்சம் ரூபாய் மற்றும் நிலத்தையும் வழங்கினேன். அதன்பின், என்னை அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது.இதுகுறித்து, நாகர்கோவில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தேன்; நடவடிக்கை இல்லை.நான் புகாரில் கூறியிருந்தவர்கள் துாண்டுதலில், 2013ல், கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ., சாந்தி, என் வீட்டுக்கு வந்து தாக்கி, தலைமுடியை பிடித்து, ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றார்.

பின், சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்தபின் விடுவித்தார். எனவே, எஸ்.ஐ., மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அத்தொகையை, எஸ்.ஐ., சாந்தியிடம் வசூலித்து கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும், சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X