ஐபிஎல்: கோல்கட்டா இமாலய வெற்றி: மும்பை அணிக்கு சிக்கல்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சார்ஜா: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிவம் மாவி, பெர்குசன் 'வேகத்தில்' மிரட்ட கோல்கட்டா அணி 86 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.நிதான துவக்கம்:
IPL 2021, KKR vs RR, Kolkata Knight Riders, Rajasthan Royals

சார்ஜா: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிவம் மாவி, பெர்குசன் 'வேகத்தில்' மிரட்ட கோல்கட்டா அணி 86 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


நிதான துவக்கம்:


கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி நிதான துவக்கம் தந்தது. உனத்கட் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த சுப்மன், சேட்டன் சக்காரியா பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன் எடுத்திருந்தது. உனத்கட் வீசிய 10வது ஓவரில் எழுச்சி கண்ட வெங்கடேஷ், 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது ராகுல் டிவாட்டியா பந்தில் வெங்கடேஷ் (38) போல்டானார்.


சுப்மன் அபாரம்:


பிலிப்ஸ் வீசிய 12வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய நிதிஷ் ராணா (12), அதே ஓவரில் அவுட்டானார். பிலிப்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கிய ராகுல் திரிபாதி, ஷிவம் துபே வீசிய 14வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார். சக்காரியா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சுப்மன் கில் அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய சுப்மன் (56), மோரிஸ் 'வேகத்தில்' வெளியேறினார்.


latest tamil news


அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், முஸ்தபிஜுர் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். சக்காரியா பந்தில் திரிபாதி (21) போல்டானார். மோரிஸ் வீசிய கடைசி ஓவரில் மார்கன் ஒரு சிக்சர் விளாசினார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. கார்த்திக் (14), மார்கன் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.


விக்கெட் 'மடமட':


சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு, கோல்கட்டா பவுலர்கள் துவக்கத்திலேயே நெருக்கடி தந்தனர். சாகிப் வீசிய முதல் ஓவரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (0) போல்டானார். ஷிவம் மாவி 'வேகத்தில்' கேப்டன் சஞ்சு சாம்சன் (1) வெளியேறினார். பெர்குசன் பந்தில் லிவிங்ஸ்டன் (6), அனுஜ் ரவாத் (0) அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய மாவி பந்தில் பிலிப்ஸ் (8), ஷிவம் துபே (18) ஆட்டமிழந்தனர். வருண் சக்ரவர்த்தி 'சுழலில்' கிறிஸ் மோரிஸ் (0) சிக்கினார். பெர்குசன் 'வேகத்தில்' உனத்கட் (6) அவுட்டானார்.

பொறுப்பாக ஆடிய ராகுல் டிவாட்டியா, வருண், நரைன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். சக்காரியா (1) 'ரன்-அவுட்' ஆனார். மாவி பந்தில் டிவாட்டியா (44) போல்டானார். ராஜஸ்தான் அணி 16.1 ஓவரில் 85 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கோல்கட்டா சார்பில் மாவி 4, பெர்குசன் 3 விக்கெட் கைப்பற்றினர்.


மும்பைக்கு சிக்கல்:


ராஜஸ்தானை 86 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கோல்கட்டாவின் 'பிளே-ஆப்' வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற இன்று ஐதராபாத் அணியை 171 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இல்லையென்றால் வெளியேற நேரிடும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹரி ஹூசைன்,மன்னை ரிலையன்ஸ் குரூப் நம்ம சன் குழுமத்தை விட பெரியது.. நாளைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வாங்க வேண்டியதை அம்பானி வாங்கிடுவார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X