பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு சதவீதம்: தேர்தல் ஆணையம் திணறல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதத்தை கணக்கிட முடியாமல், மாநில தேர்தல் ஆணையம் திணறியது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, முதல் கட்ட தேர்தல், நேற்று

சென்னை:முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதத்தை கணக்கிட முடியாமல், மாநில தேர்தல் ஆணையம் திணறியது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, முதல் கட்ட தேர்தல், நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

மாலை 6:௦௦ மணிக்கு தேர்தல் முடிந்தது.இதையடுத்து, மாவட்டங்களில் இருந்து இறுதிகட்ட ஓட்டுப்பதிவு விபரங்கள், ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து, மொத்த ஓட்டுப்பதிவு சதவீதத்தை கணக்கீடு செய்ய முடியாமல், தேர்தல் ஆணைய அதிகாரிகள் திணறினர். ஒருவழியாக இரவு 10.40 மணிக்கு, மொத்த ஓட்டுப்பதிவு சதவீதம் சராசரியாக வெளியிடப்பட்டது.

சரியான விபரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்றும் வெளியிடவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று ஒன்றியங்களில், 84.3 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, மாவட்ட நிர்வாகம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், 80 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக கூறப்பட்டது. எது உண்மையான சதவீதம் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தில், இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள திறமையான அலுவலர்கள் இல்லை. இருக்கும் பணியாளர்களை வைத்து, தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவே திணறலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X