சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் காவலர் குடியிருப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள போலீஸ் குடியிருப்பு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின்ரோடு பகுதியில், போலீஸ் குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் குடியிருந்து வந்த நிலையில், வீடுகள் சேதமடைந்தது.

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள போலீஸ் குடியிருப்பு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின்ரோடு பகுதியில், போலீஸ் குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் குடியிருந்து வந்த நிலையில், வீடுகள் சேதமடைந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போலீசார் அங்கு தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போலீஸ் குடியிருப்பு வீடுகள் காலியாக உள்ளதை, சமூக விரோதிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மது அருந்துதல், சூதாடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டடங்களை அகற்றிவிட்டு, போலீசார் பயனடையும் வகையில் புதிதாக குடியிருப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X