சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு பெயரில் பாஸ்போர்ட் மோசடி

Added : அக் 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இரண்டு பெயரில், இரு முகவரியில் பாஸ்போர்ட் பெற்ற சாதிக்பாட்ஷா 53, மீது போலீசார் மீது வழக்கு பதிந்தனர்.ராமநாதபுரம் அருகே வாணி காரிக்கூட்டத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா 53. இவர் 2010 ஜூன் 17 ல் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் காரிக்கூட்டம் நுார்முகமது மகன் சாதிக்பாட்ஷா என்ற பெயரில் பாஸ்போர்ட் பெற்றார். 2018 செப்.20ல் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இரண்டு பெயரில், இரு முகவரியில் பாஸ்போர்ட் பெற்ற சாதிக்பாட்ஷா 53, மீது போலீசார் மீது வழக்கு பதிந்தனர்.

ராமநாதபுரம் அருகே வாணி காரிக்கூட்டத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா 53. இவர் 2010 ஜூன் 17 ல் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் காரிக்கூட்டம் நுார்முகமது மகன் சாதிக்பாட்ஷா என்ற பெயரில் பாஸ்போர்ட் பெற்றார். 2018 செப்.20ல் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் காரிக்கூட்டம் அலாவுதீன் மகன் முகம்மது துக்ளக் என்ற பெயரில் மற்றொரு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ராமநாதபுரம் எஸ்.பி.,கார்த்திக்கிடம் புகார் அளித்தார். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.

* இதே போல் ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் மெயின்ரோட்டை சேர்ந்த ஹஜித்து நிஷா 45, போலி திருமண சான்றிதழ் வழங்கி மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கமுதி சிறுமி அசாமில் மீட்புகமுதி: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி விருதுநகர் அருகே பந்தல்குடியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆக.9 ல் அங்கு பணிபுரியும் வெளிமாநில இளைஞர்கள் சிறுமியை அழைத்து சென்றனர்.

கமுதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் விசாரித்து வந்தார். எஸ்.ஐ., முருகன் தலைமையில் போலீசார் சிறுமியின் அலைபேசி சிக்னலை ஆய்வு செய்தபோது அஸ்ஸாமில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அசாம் மாநிலம் மங்கள்டோஸ் பகுதி சிறுவர் காப்பகத்தில் இருந்த சிறுமியை அசாம் போலீஸ் உதவியுடன் கமுதி போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

கொலை முயற்சி: 4 பேருக்கு 3 ஆண்டு சிறை

ராமநாதபுரம்: கொலை முயற்சி வழக்கில் ராமநாதபுரத்தை சேர்ந்த நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மதுரை செட்டிய தெரு சூரியமூர்த்தி மகன் பார்த்தசாரதிக்கும், காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு ஆறுமுகம் மகன் யோகேஸ்வரன் 45, என்பவருக்கும் வியாபார ரீதியில் விரோதம் இருந்தது. இதன் காரணமாக பார்த்தசாரதியை யோகேஸ்வரன் 45, உறவினர்கள் மாரியம்மன் கோவில் தெரு விஸ்வநாதன், ராஜேஷ், கார்த்தி, குட்டை கண்ணன், யோகேஸ்வரன் தந்தை ஆறுமுகம், சீனிவாசன் 2012 ஜன.,4 இரவு வழிமறித்து வெட்டினர். கேணிக்கரை போலீசார் ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. ஆறுமுகம் ஏற்கனவே இறந்த நிலையில், நேற்று நீதிபதி கவிதா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் யோகேஸ்வரன், விஸ்வநாதன், கார்த்தி, குட்டை கண்ணன் ஆகியோருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார், ராஜேஷ், சீனிவாசன் விடுதலை செய்யப்பட்டனர்.

லாட்டரி விற்பனை: 4 பேர் கைது

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா 48, ஆன்லைனில் லாட்டரி விற்ற அவருக்கு உடந்தையாக இருந்த, உமர் புலவர் தெருவை சேர்ந்த செய்யது முகமது 52, கோழியார்கோட்டை அப்பாஸ் 36, செங்குடி ஜேம்ஸ் 42, ஆகியோரை ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார், போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X