சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம்; நயினார்கோவிலில் உறவினர்கள் மறியல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : நயினார்கோவிலில் ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.நயினார்கோவில் அருகே வாதனேரியை சேர்ந்தவர் தர்மதுரை 26. ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தர்மதுரை மனைவியை பிரிந்து ஏ.காச்சான் கிராமத்தில் தாயுடன் வசித்தார். நேற்று முன்தினம் மாலை அவருக்கு தெரிந்த ஆட்டோ டிரைவர்கள் இருவருடன் முதுகுளத்தூர்

ராமநாதபுரம் : நயினார்கோவிலில் ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நயினார்கோவில் அருகே வாதனேரியை சேர்ந்தவர் தர்மதுரை 26. ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தர்மதுரை மனைவியை பிரிந்து ஏ.காச்சான் கிராமத்தில் தாயுடன் வசித்தார். நேற்று முன்தினம் மாலை அவருக்கு தெரிந்த ஆட்டோ டிரைவர்கள் இருவருடன் முதுகுளத்தூர் சென்றார்.அண்டக்குடி அருகே சென்ற போது ஆட்டோ கவிழ்ந்ததில் தர்மதுரை காயமடைந்தார். அவரை நயினார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு உடன் வந்த இருவரும் சென்றுவிட்டனர்.

உறவினர்கள் தர்மதுரையை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.தர்மதுரை மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையில் டாக்டர்கள் குழு ஈடுபடவும், தங்களையும் பார்வையிட அனுமதிக்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு எஸ்.பி., கார்த்திக் நேரில் பார்வையிட்டு பிரேத பரிசோதனையை இரு டாக்டர்கள் ஈடுபடவும், அதை வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்தார்.

அப்போது நயினார்கோவில் போலீசார் பிரேத பரிசோதனை அறைக்குள் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மதுரை உறவினர்கள் கோஷமிட்டதோடு, தங்களையும் பிரேத பரிசோதனை அறைக்குள் அனுமதிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். நயினார்கோவில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X