பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் மீட்பு குழுவில் 3500 பணியாளர்கள் நியமனம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்புக்குழு வில் 3500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை, நடவடிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்புக்குழு வில் 3500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை, நடவடிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரான எரிசக்திதுறை அரசுமுதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை வகித்தார். கலெக்டர்(பொ) காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தார்.

இதில் கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியதாவது: மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளாக 39 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 15 மண்டல அளவில் துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் கொண்ட 15 குழுக்கள், 429 ஊராட்சிகளில் 3,500 கொண்ட முதல் நிலை மீட்பு பணியாளர்கள் உள்ளனர். 197 நிவாரண மையங்கள் உள்ளன. மீட்பு பணிக்கு தேவையான இயந்திரங்கள், ஜெனரேட்டர் , மின்கம்பங்கள், மரக்கட்டைகள் உட்பட நவீன உபகரணங்கள் உள்ளன.சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டால் உடனடியாக செப்பனிடவேண்டும்.

கண்மாய், ஊரணிகள் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள், கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு வானிலைமுன்னெச்சரிக்கை தொடர்பாக அறிவிக்க வேண்டும். புகார்களை 1077கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்,' என்றார்.கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், எஸ்.பி., கார்த்திக், ஆர்.டி.ஓ.,க்கள் ராமநாதபுரம் சேக்மன்சூர், பரமக்குடி முருகன் உட்பட அரசுதுறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக ஆர்.எஸ்.மங்கலம் பெரியகண்மாண் கால்வாய் பராமரிப்பு பணிகளை தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X