தமிழ்நாடு

குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது கவனம் தேவை; போலீசாருக்கு எஸ்.பி., அறிவுரை

Added : அக் 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது போலீசார் கவனமாக செயல்பட வேண்டும், என எஸ்.பி., கார்த்திக் அறிவுரை வழங்கியுள்ளார்.அனிச்சகுடிகோயிலில் தகராறு செய்த மலைராஜ் என்பவரை விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்ற ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., தமிழ்ச்செல்வனை 57, போதையில் இருந்தபோது மலைராஜ் அவரை அரிவாளால் தலையில் வெட்டினார். காயத்துடன் ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி

ராமநாதபுரம் : குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது போலீசார் கவனமாக செயல்பட வேண்டும், என எஸ்.பி., கார்த்திக் அறிவுரை வழங்கியுள்ளார்.

அனிச்சகுடிகோயிலில் தகராறு செய்த மலைராஜ் என்பவரை விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்ற ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., தமிழ்ச்செல்வனை 57, போதையில் இருந்தபோது மலைராஜ் அவரை அரிவாளால் தலையில் வெட்டினார். காயத்துடன் ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து விசாரித்த எஸ்.பி., கார்த்திக், பின்னர்போலீசாருக்கு மைக்கில் அறிவுரை வழங்கினார்.

அப்போது, போலீசார் குற்றத்தடுப்பு பணியில் ஈடுபடும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போது அவர்களது செயல்பாட்டை கவனித்து, அதற்கேற்ப லத்தி உள்ளிட்டவற்றை கையாள்வது அவசியம். கையில் ஏதுமின்றி குற்றவாளிகள் தாக்கும் நிலையை தவிர்க்கும் வகையில் செயல்படவேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X