தமிழ்நாடு

அடங்கல் சான்று தாமதத்தால் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல்! காலக்கெடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.33 எக்டேர் அளவிற்கு நெல், பருத்தி 6703 எக்டேர், தென்னை 8419 எக்டேர் , சிறுதானியங்கள் 9731 எக்டேர், பயறுவகை 4702 எக்டேர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி ஆண்டுதோறும் சம்பா நெல்சாகுபடி அக்டோபரில் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். தற்போது மழைபெய்து வருவதால் பருத்தி, மிளகாய், நெல்சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது.இதனையடுத்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.33 எக்டேர் அளவிற்கு நெல், பருத்தி 6703 எக்டேர், தென்னை 8419 எக்டேர் , சிறுதானியங்கள் 9731 எக்டேர், பயறுவகை 4702 எக்டேர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையை நம்பி ஆண்டுதோறும் சம்பா நெல்சாகுபடி அக்டோபரில் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். தற்போது மழைபெய்து வருவதால் பருத்தி, மிளகாய், நெல்சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது.இதனையடுத்து வேளாண்துறையினர் பிரீமியம் செலுத்தி நவ.,15க்குள் பயிர் காப்பீடு செய்ய பிரசாரம் செய்கின்றனர்.

நெல் ஒரு எக்டேருக்கு ரூ.805.59 பிரீமியம், காப்பீட்டுத்தொகை ரூ.53,706. ஆதார் அட்டை , வங்கிகணக்கு புத்தக முதல் பக்க நகல், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் சான்று ஆகியவற்றுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பொதுவுடமை வங்கிகள், இ-சேவை மையங்களில் பிரீமியம் செலுத்தி பயிர்காப்பீடு செய்யலாம். வயல் உழுதல், விதைப்பு, உரமிடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதால் காப்பீடு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மயில்வாகனன் கூறுகையில், அக்டோபரில் நெல் சாகுபடி பணியால் கடந்தாண்டு நவ., 30 வரை பயிர்காப்பீடு செய்ய அவகாசம் வழங்கினர். தற்போது 15 நாட்களை குறைத்து விட்டனர். மேலும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் அடங்கல் சான்று வழங்கும் பணி தொடங்கவில்லை. இந்தச்சான்று விரைந்து வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் இ.சேவை மையங்களில் பிரீமியம் செலுத்தி பயிர்காப்பீடு செய்வதால் பதிவில் நிறைய குளறுபடிகள் ஏற்படுகிறது. ஆகையால் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கம், பொதுவுடமை வங்கிகளில் பயிர்காப்பீடு செய்வதற்கு நவ.,30 வரை கால அவகாசம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பயிர்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க வேண்டும்,'என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X