அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீசார் அச்சுறுத்தல் அ.தி.மு.க., கண்டனம்

Updated : அக் 09, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை :'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினரை, தேர்தல் பணி செய்ய விடாமல், காவல் துறையினர் அச்சுறுத்தும் நிலை தொடர்ந்தால், ஜனநாயக வழியில், மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.அவர்கள் அறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு,
போலீசார் அச்சுறுத்தல் அ.தி.மு.க., கண்டனம்

சென்னை :'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினரை, தேர்தல் பணி செய்ய விடாமல், காவல் துறையினர் அச்சுறுத்தும் நிலை தொடர்ந்தால், ஜனநாயக வழியில், மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

அவர்கள் அறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய ஜனநாயக படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில், மனித உரிமை மீறலை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.தி.மு.க., அரசு, காவல் துறையை தன் கைப்பாவையாக்கி, அரசு ஊழியர்களை ஏவல் துறையாக மாற்றி, தில்லுமுல்லுகளை செய்து, அ.தி.மு.க.,வினரை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.இந்த சலசலப்புக்கு எல்லாம், கட்சியினர் அஞ்சக்கூடியவர்கள் அல்ல. இதுபோன்ற கீழ்தரமான அரசியலை, அ.தி.மு.க., ஒரு நாளும் முன்னெடுக்காது.

பல இடங்களில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினரை, தேர்தல் பணி செய்ய விடாமல் காவல் துறையினர் அச்சுறுத்தி வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இது தொடருமானால், ஜனநாயக வழியில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும். இந்நிலைக்கு காவல் துறை எங்களை தள்ளக்கூடாது.உயர்நீதிமன்ற உத்தரவை துச்சமென மதிக்கும், தி.மு.க., அரசை வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்ற உத்தரவை முழுதுமாக நிறைவேற்றி, நியாயமான முறையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202113:48:38 IST Report Abuse
duruvasar விடியல் விடியல், விடியல் மட்டுமே. பிடிக்காதவர்களுக்கு கம்பனி நிர்வாகம் பொறுப்பு இல்லை.
Rate this:
Cancel
08-அக்-202107:32:20 IST Report Abuse
அப்புசாமி அதென்ன அப்புடி சொல்லிப்புட்டீக.... நீங்க முதல்வராயிருந்த போது சலாம் போட்ட அதே போலூஸ்தான் இப்போ அவிங்களுக்கு சலாம் போடுது. காட்சி மாறவில்லை. ஆட்சிதான் மாறியிருக்குது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-அக்-202106:02:45 IST Report Abuse
Kasimani Baskaran தீவிர இந்து விரோதமே திமுகவின் இப்பொழுதைய பிரதான தொழில் நுணுக்கம். அதை உடைத்தால் திமுக பனாலாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X