பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை நகர் பட்டியலில் சிங்கம்புணரி

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியை பசுமை நகர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் நகர் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். 18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சி தெருக்களிலும் சாலைகளிலும் ஏராளமான மரங்கள் இருந்தன. நகர் விரிவாக்கம், சாலை, கழிவுநீர் கால்வாய் பணிக்காக பல இடங்களில் இருந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.தற்போது காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை

சிங்கம்புணரி : சிங்கம்புணரியை பசுமை நகர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் நகர் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். 18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சி தெருக்களிலும் சாலைகளிலும் ஏராளமான மரங்கள் இருந்தன. நகர் விரிவாக்கம், சாலை, கழிவுநீர் கால்வாய் பணிக்காக பல இடங்களில் இருந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.

தற்போது காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணியின்போதும் பல மரங்கள் வெட்டப்பட்டன. சில நாட்களாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பலர் நகர் முழுவதும்ஏராளமான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க தொடங்கியுள்ளனர்.சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் கோயில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை சாலை, ஊரணி, குளங்கள், சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் சமூக நலன் சார்ந்த ஆர்வலர்களும், தொழிலதிபர்களும், சேவை அமைப்புகளும் மரங்களை நடவு செய்து பராமரிக்கின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சியினரும் மரக்கன்றுகளை நட தொடங்கியுள்ளனர். மரக்கன்றுகளை நடவு செய்த பணியோடு விட்டுவிடாமல் கம்பிக் கூண்டு அமைத்தும் ஆட்களை வைத்து தினசரி தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X