ரூ.௫ கோடி கடன் தருவதாக கூறி டாக்டரிடம் ரூ., 20 லட்சம் ரொக்கபணம் வசூல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.௫ கோடி கடன் தருவதாக கூறி டாக்டரிடம் ரூ., 20 லட்சம் ரொக்கபணம் வசூல்

Added : அக் 08, 2021
Share
தர்மபுரி, அக்:கடனாக 5 கோடி ரூபாய் கேட்ட டாக்டரிடம், 20 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பலுார் அடுத்த துறைமங்கலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சரவணகுமார், 47; துறையூரில் உள்ள தன் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு, 5 கோடி ரூபாய் கடன் வாங்க முயற்சித்தார். நண்பர்கள் மூலம் அறிமுகமான, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி, டாக்டர்

தர்மபுரி, அக்:கடனாக 5 கோடி ரூபாய் கேட்ட டாக்டரிடம், 20 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

.பெரம்பலுார் அடுத்த துறைமங்கலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சரவணகுமார், 47; துறையூரில் உள்ள தன் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு, 5 கோடி ரூபாய் கடன் வாங்க முயற்சித்தார். நண்பர்கள் மூலம் அறிமுகமான, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி, டாக்டர் சரவணகுமாரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். தனக்கு தெரிந்த பைனான்ஸ் அதிபர் சிவகுமாரிடம், 5 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறியதுடன், சில நாட்களுக்கு முன், அவரை டாக்டர் சரவணகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கடந்த 4ம் தேதி சரவணகுமாரை தொடர்பு கொண்ட சிவகுமார் அக்., 6ல் தர்மபுரியில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். இதன்படி, தன் மாருதி காரில், ராஜபாண்டி, டிரைவர் பிச்சைமுத்து மற்றும் நண்பர்கள் பாலு, சதாம் ஆகியோருடன் டாக்டர் சரவணகுமார் வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு, பழைய தர்மபுரி 'புல்லட் ஷோரூம்' மையம் அருகே, அவர்களை 'ஸ்கோடா' காரில் வந்த சிவகுமார் சந்தித்து உள்ளார். 'டிக்கி'யில் இருந்த பணத்தை காட்டி, டாக்டர் சரவணகுமாரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றுள்ளார்.அப்போது, அங்கு போலீஸ் வாகனத்தில் மப்டியில் வந்த நான்கு பேர், அவர்களின் காரை நிறுத்தினர். உடனே சரவணகுமாரை மட்டும் இறக்கிவிட்டு, அனைவரும் காரில் தப்பினர். போலீஸ் வாகனத்தில் வந்தவர்களும் அங்கிருந்து சென்றனர்.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணகுமார் அதிர்ச்சி அடைந்தார். அவரது புகாரின்படி, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X