அரசு நில மோசடி விவகாரம் லஞ்ச ஒழிப்பு விசாரணை?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு நில மோசடி விவகாரம் லஞ்ச ஒழிப்பு விசாரணை?

Added : அக் 08, 2021
Share
தேனி:பெரியகுளம் அருகே, 94.65 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்ட ஆறு அரசு அலுவலர்கள் உட்பட, மோசடி பட்டாக்களை வாங்கிய 69 பேர் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி சர்வே எண் 814ல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 94.65 ஏக்கர் நிலம் மோசடியாக, பலருக்கு பட்டா மாறுதல்

தேனி:பெரியகுளம் அருகே, 94.65 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்ட ஆறு அரசு அலுவலர்கள் உட்பட, மோசடி பட்டாக்களை வாங்கிய 69 பேர் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி சர்வே எண் 814ல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 94.65 ஏக்கர் நிலம் மோசடியாக, பலருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது.இந்த மோசடியில் ஈடுபட்டதாக, இரண்டு தாசில்தார்கள்; இரு துணை தாசில்தார்கள்; இரு சர்வேயர்கள் என ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியாக வழங்கப்பட்ட அரசு இடத்தை பட்டாவாகவும், கூட்டுப் பட்டாவாகவும் பெற்ற 69 பேர், மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் ஆறு பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, பெரியகுளம் சப் - -கலெக்டர் ரிஷப், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X