பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை தெப்பக்குள குப்பை அகற்றம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால் சிவகங்கை தெப்பக்குளத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை நகராட்சி, தீயணைப்பு துறையினர் அகற்றினர்.சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் எதிரே உள்ள நகராட்சி தெப்பக்குளத்தில் மழை காலத்தில் கால்வாயில் இருந்து வந்த மழை நீர் சேகரமானது. அதேநேரம் கால்வாயில் குவிந்து கிடந்த குப்பைகள் மழை நீருடன் தெப்பக்குளத்திற்குள் தேங்கியது. இதனால் தண்ணீர்

சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால் சிவகங்கை தெப்பக்குளத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை நகராட்சி, தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் எதிரே உள்ள நகராட்சி தெப்பக்குளத்தில் மழை காலத்தில் கால்வாயில் இருந்து வந்த மழை நீர் சேகரமானது. அதேநேரம் கால்வாயில் குவிந்து கிடந்த குப்பைகள் மழை நீருடன் தெப்பக்குளத்திற்குள் தேங்கியது. இதனால் தண்ணீர் முழுவதும் குப்பைகளாக காட்சி அளித்தன.

இது குறித்து தினமலரில் புகைப்படம் வெளியானது.இதன் எதிரொலியாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவுபடி சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வீரர்களும், நகராட்சி கமிஷனர் ராஜேஸ்வரன், சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் தங்கபாண்டி உள்ளிட்ட நகராட்சி துாய்மை பணியாளர்கள் தெப்பக்குளத்தில் மிதந்த குப்பைகளை ரப்பர் படகு மூலம் சென்று அகற்றினர். மேலும் தெப்பக்குளத்தில் குப்பைகளை கொட்டினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். தற்போது சிவகங்கை தெப்பக்குளம் சுத்தமாக காட்சி அளிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X