தமிழ்நாடு

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ; கட்டுமான பணிகள் பாதிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
காரைக்குடி : ட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வால் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு, வேலையின்றி சிவகங்கை மாவட்ட கட்டட தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.தமிழகத்தில் கட்டுமான பொருட்களான சிமின்ட், கம்பி விலை உயர்வு, கிராவல் மண் எடுக்க தடை போன்ற நிகழ்வுகளால் கட்டுமான பணிகள் பாதித்து வருகின்றன. குறிப்பாக அக்.,4 ம் தேதி முதல் சிமின்ட் விலை மூடைக்கு ரூ.500,

காரைக்குடி : ட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வால் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு, வேலையின்றி சிவகங்கை மாவட்ட கட்டட தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கட்டுமான பொருட்களான சிமின்ட், கம்பி விலை உயர்வு, கிராவல் மண் எடுக்க தடை போன்ற நிகழ்வுகளால் கட்டுமான பணிகள் பாதித்து வருகின்றன. குறிப்பாக அக்.,4 ம் தேதி முதல் சிமின்ட் விலை மூடைக்கு ரூ.500, கம்பி விலையிலும் ரூ.6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டன.

இம்மாவட்டத்தில் கிராவல் மண் எடுக்கவும் தற்போது தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக இம்மாவட்டத்தில் கட்டுமான பணிகளை நம்பியுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் வீடுகள், கட்டடங்கள் கட்டுவதில் சற்று தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

காரைக்குடி கட்டட பொறியாளர் சங்க தலைவர் ராஜரத்தினம் கூறியதாவது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கிராவல் மண் எடுக்க தடையால் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் கடுமையாக பாதித்துள்ளன. இதை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் கட்டுமான தொழிலாளர், வீடு கட்டுவோர், பொறியாளர்கள் பெரிதும் பாதித்துள்ளனர். தமிழக அரசு விலை ஏற்றத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X