சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காத்திருப்போர் பட்டியலில் 'மல்லிகை மொட்டு' டி.சி., * 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை:'ஆயில் மசாஜ்' செய்த உடலோடு, 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை புல்லாங்குழலில் கேட்டு ரசித்த மதுரை துணை கமிஷனர் சோமசுந்தரம், சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம். இவர், ஏற்கனவே மதுரையில் உதவி கமிஷனராக இருந்தபோது, 'டிக் டாக்' சர்ச்சையில் சிக்கியவர். பின், துாத்துக்குடி,
 காத்திருப்போர் பட்டியலில் 'மல்லிகை மொட்டு' டி.சி., * 'தினமலர்' செய்தி எதிரொலி

மதுரை:'ஆயில் மசாஜ்' செய்த உடலோடு, 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை புல்லாங்குழலில் கேட்டு ரசித்த மதுரை துணை கமிஷனர் சோமசுந்தரம், சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம். இவர், ஏற்கனவே மதுரையில் உதவி கமிஷனராக இருந்தபோது, 'டிக் டாக்' சர்ச்சையில் சிக்கியவர். பின், துாத்துக்குடி, சென்னை போன்ற இடங்களில் பணியாற்றி, பதவி உயர்வுடன் மதுரை வந்தார்.சில நாட்களுக்கு முன் உள்ளாடையுடன், ஆயில் மசாஜ் செய்த உடலோடு இவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ்காரர் ஒருவர் புல்லாங்குழலில், 'பொத்தி வச்ச மல்லிகைமொட்டு' பாடலை இசைத்தார்.

அருகில் காலி மது பாட்டில் இருந்தது. கண்ணியமிக்க போலீஸ் பதவியில் இருக்கும் சோமசுந்தரம், தன் சொந்த விஷயங்களுக்கு போலீசாரை பயன்படுத்தியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்த நிலையில், சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X