பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் நெல் நட தயக்கம்; காட்டு பன்றிகளால் அச்சம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும் இன்னமும் விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.திருப்புவனம் வட்டாரத்தில் பிரமனூர், பழையனூர், திருப்புவனம், ராங்கியம் உள்ளிட்ட கண்மாய்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் நெல், வாழை,

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும் இன்னமும் விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் பிரமனூர், பழையனூர், திருப்புவனம், ராங்கியம் உள்ளிட்ட கண்மாய்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட எந்த விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. பகலில் கருவேல மரங்களுக்கு அடியில் ஓய்வெடுக்கும் பன்றிகள் இரவில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க முடியாமல் திணறுகின்றனர்.தி.புதுார் விவசாயி கணேசன் கூறியதாவது, காட்டு பன்றி ஒவ்வொன்றும் 150 கிலோ உள்ளன. கூட்டமாக வரும் இவற்றை விரட்ட முடியவில்லை. பயிர்களை அழித்து வருகின்றன. நல்ல மழை பெய்தும் பன்றிகள் தொல்லையால் நெல் நடவு செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X