இந்தியா

ஜி.எஸ்.டி., ரூ.40,000 கோடி இழப்பீடு; மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.இது குறித்து மத்திய நிதியமைச்சகம்
GST compensation,GST,Centre

புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., கூடுதல் வரி வசூல் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மதிப்பிடப்பட்டிருந்தது.


latest tamil news




இத்துடன், திரும்பப் பெறும் கடன் அடிப்படையில் 1.59 லட்சம் கோடி ரூபாய் வழங்க 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 2.59 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தொகையில் ஜூலைchmf 75 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது, மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநிலங்களுக்கு மொத்தம், 1.15 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை தவணையில் தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-அக்-202108:29:21 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இன்று வரை எவ்வளவு gst ping என்று நம்ம தமிழ் நாட்டு நிதி அமைச்சர் வெளியிடவில்லை. சும்மா டிவி யிலும் பொது வழியிலும் உளருகின்றனர். ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் உண்மை புரியும். அதை செய்யாமல் சும்மா பீலா விட்டு கொண்டு இருக்கிறார்கள் அதற்கு ஒரு பிரியாணி quarter கூட்டம் ஆமாம் சாமி போடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X