சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் மறையும் கால்தடம் புலியை பிடிப்பதில் புது சிக்கல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கூடலுார்:மசினகுடியில் தொடர் மழையால், புலியை பிடிப்பது வனத்துறைக்கு சவாலாக அமைந்து உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நான்கு பேரை தாக்கி கொன்ற, 'டி 23' புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் 13வது நாளாக ஈடுபட்டு உள்ளனர். தானியங்கி கேமராக்களில், புலியின் போட்டோ பதிவாகாத நிலையில், கால் தடத்தின் அடிப்படையில் தேடும் பணி தொடர்கிறது. முதுமலை கள
 மழையால் மறையும் கால்தடம் புலியை பிடிப்பதில் புது சிக்கல்

கூடலுார்:மசினகுடியில் தொடர் மழையால், புலியை பிடிப்பது வனத்துறைக்கு சவாலாக அமைந்து உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நான்கு பேரை தாக்கி கொன்ற, 'டி 23' புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் 13வது நாளாக ஈடுபட்டு உள்ளனர். தானியங்கி கேமராக்களில், புலியின் போட்டோ பதிவாகாத நிலையில், கால் தடத்தின் அடிப்படையில் தேடும் பணி தொடர்கிறது.

முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:புலி வேறு பகுதிக்கு இடம்பெயர்வதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்வதால், புலியை தேடுவதிலும், கால் தடத்தை அடையாளம் காண்பதிலும் சிரமம் உள்ளது. தீவிர தேடுதல் பணி தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, சிறப்பு பயிற்சி பெற்ற கேரளா வனத்துறை சிறப்பு குழுவினர் 13 பேர், புலியை தேடும் பணியில் இணைந்துள்ளனர்.தமிழக தலைமை முதன்மை வன உயிரினபாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறுகையில், ''புலி உணவு உட்கொண்டு மூன்று நாட்கள் ஆகியிருப்பதால், இன்னும் இரண்டு நாளில் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X