ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு 

Added : அக் 08, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்துவைத்தார்.அவர் கூறியதாவது, மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி, மருந்து தரப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி கேட்டு பெற்றோம். சிறப்பு முகாம் மூலம் 70 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிப்பு

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்துவைத்தார்.

அவர் கூறியதாவது, மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி, மருந்து தரப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி கேட்டு பெற்றோம். சிறப்பு முகாம் மூலம் 70 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிப்பு ஏற்பட்டது. இதைபோக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசு சிரத்தை எடுத்து தமிழகத்தில் 70 மருத்துவமனைகளில் இம்மையம் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, டீன் ரேவதி, கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவ அலுவலர் மிதுன்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X