பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கம்புணரியில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது.இவ்வொன்றியத்தில் பரவலாக மழை பெய்து பெரும்பாலான நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து விவசாயிகள் பலர் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாய பணிகளுக்காக கம்போஸ் யூரியா போன்ற உரங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள

சிங்கம்புணரி : சிங்கம்புணரி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

இவ்வொன்றியத்தில் பரவலாக மழை பெய்து பெரும்பாலான நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து விவசாயிகள் பலர் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாய பணிகளுக்காக கம்போஸ் யூரியா போன்ற உரங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சில கடைகளில் உரங்களை அரசு நிர்ணயித்த விலையை விட 20 சதவீதம் வரை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.

விவசாயி முத்துராமலிங்கம் கூறியதாவது, மழை பெய்துள்ளதால் விவசாயிகள் நடவு பணிகளை துவக்கியுள்ளோம். இந்த ஆண்டு சில கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்கிறார்கள். தொடர்ந்து விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது உரத்திற்கு கூடுதல் செலவு வருவதால் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசு கண்காணித்து அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X